PUBLISHED ON : ஜூலை 20, 2024 12:00 AM

ஜூலை 20, 1937
திருவண்ணாமலையில், 1937ல் இதே நாளில் பிறந்தவர் சுந்தர்ராமன் எனும் ரமணன். இவரது தந்தை, மும்பையில் பணியாற்றியதால் அங்கு படித்தார். பின் தந்தை, சென்னையில் தொழில் செய்ததால், இவரும் சென்னை வந்து ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி, விவேகானந்தா கல்லுாரியில், கணித பாடத்தில் பட்டம் பெற்றார். ரயில்வேயில் எழுத்தராக பணியாற்றினார்.
பின், மும்பையில் உள்ள டி.ஐ.எப்.ஆர்.,ல் சேர்ந்து கணிதத்தில் பி.எச்டி., முடித்தார். ஆக்ஸ்போர்டு, ஹார்வார்டு பல்கலை, இ.டி.எச் சூரிச் ஆகியவற்றிலும் ஆய்வு படிப்புகளை முடித்தார்.
உலக பல்கலைகளில் பேராசிரியராக பணியாற்றினார். ஸ்பிரங்கர் வெர்லாக், ஆலன் அட்லருடன் இணைந்து, 'மாடுலி ஆப் அபெலியன் வகைகள், குளோபல் கால்குலஸ்' ஆகிய புத்தகங்களை எழுதினார். சென்னை கணித அறிவியல் நிறுவனத்தில் துணை பேராசிரியராக பணியாற்றி, மாணவர்களை ஆய்வாளர்களாக்கினார். 'சாந்தி ஸ்வரூப் பட்நாகர், டி.டபுள்யூ.எஸ்., விருதுகளுடன் ராமானுஜர் பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
இந்திய கணிதவியல் அறிஞரின் 87வது பிறந்த தினம் இன்று!