தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதே நாளில் அன்று/ இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


PUBLISHED ON : ஜூலை 26, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 26, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூலை 26, 1910

ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், ரல்லபுடகுரு கிராமத்தில், 1910ல் இதே நாளில் பிறந்தவர் புடகுரு ராமகிருஷ்ணய்யா பந்துலு எனும் பி.ஆர்.பந்துலு. ஆசிரியராக பணியாற்றிய இவர், நாடகங்களிலும் நடித்தார். தொடர்ந்து கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்த இவர், பணம் படத்தில், சிறு வேடத்தில் நடித்தார். அதில், சிவாஜியும் நடித்ததால் இருவரும் நண்பர்களாகினர்.

பின், 'பத்மினி பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தை துவக்கிய பந்துலு, சிவாஜி கணேசன் நடிப்பில், தங்கமலை ரகசியம், சபாஷ் மீனா, வீரபாண்டிய கட்ட பொம்மன், கப்பலோட்டிய தமிழன், பலே பாண்டியா, கர்ணன் உள்ளிட்ட படங்களை இயக்கினார். எம்.ஜி.ஆர்., நடிப்பில், ஆயிரத்தில் ஒருவன், நாடோடி, ரகசிய போலீஸ் உள்ளிட்ட படங்களை தந்தார். தெலுங்கு, கன்னட மொழிகளிலும் வெற்றி படங்களை இயக்கினார்.

எம்.ஜி.ஆர்., நடிப்பில், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தை இயக்கிய போது, தன் 64வது வயதில், 1974 அக்டோபர் 8ம் தேதி மறைந்தார். வரலாற்று நாயகர்களுக்கு திரையில் உயிர் கொடுத்த இயக்குனரின் பிறந்த தினம் இன்று.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us