PUBLISHED ON : ஆக 29, 2024 12:00 AM

ஆகஸ்ட் 29, 1943
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகில் உள்ள நாட்டுச்சாலை எனும் ஊரில், ரங்கசாமி பிள்ளை - சின்னம்மாள் தம்பதியின் மகனாக, 1943ல் இதே நாளில் பிறந்தவர், விஜயகுமார்.
இவர், 1961ல், ஸ்ரீவள்ளிதிரைப்படத்தில் முருகன் வேடம் ஏற்று அறிமுகமானார். தொடர்ந்து சிறுவேடங்களில் நடித்த இவர், பொண்ணுக்கு தங்க மனசு படத்தில் நாயகனாக நடித்தார். எம்.ஜி.ஆர், சிவாஜியுடன், இன்று போல் என்றும் வாழ்க, தீபம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
அக்னி நட்சத்திரம் படத்திற்கு பின், பல படங்களில் அப்பா வேடம் ஏற்றார். இவர் நடித்த, நீயா, அந்தி மந்தாரை, சேரன் பாண்டியன், மாயி, சங்கமம், பாரதி கண்ணம்மா, கிழக்குச்சீமையிலே, நாட்டாமை, நட்புக்காக, சிங்கம் உள்ளிட்ட படங்கள் பேசப்பட்டன.
துணை நாயகன், தந்தை, அதிகாரி, மாமனார்,மாறுபட்ட வில்லன், தாத்தா உள்ளிட்ட வேடங்களை ஏற்று, 400க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
தன் முகத்தாலும், குரலாலும் பாத்திரத்தை வேறுபடுத்தி காட்டும் நடிப்புக்கு சொந்தக்காரரின், 81வது பிறந்த தினம் இன்று!