PUBLISHED ON : செப் 05, 2024 12:00 AM

செப்டம்பர் 5, 1945
தேனி மாவட்டம், பெரியகுளத்தில்,முகம்மது வாவா - அஹ்மிதா பீவி தம்பதியின் மகனாக, 1945ல் இதே நாளில் பிறந்தவர், முகமது மேத்தா எனும் மு.மேத்தா.
இவர், பெரியகுளம் உயர்நிலைப் பள்ளி, மதுரை தியாகராஜர் கல்லுாரிகளில் படித்தார். சென்னை மாநிலக் கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றிய இவர், வானம்பாடி கவிதை இயக்கத்தில் பங்கேற்று, கற்பனை வளம், புதுமையான சொல்லாட்சி, எளிய சொற்களால் புதுக்கவிதைகளை எழுதினார்.
இவரது, 'கண்ணீர் பூக்கள்' கவிதை தொகுதி, அக்கால கல்லுாரி மாணவர்களிடம் மனப்பாடமானது. மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரைகள் என, 20க்கும் மேற்பட்ட நுால்களை எழுதிய இவர் அனிச்சமலர் படத்தில் பாடலாசிரியரானார்.
வேலைக்காரன் படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதி புகழ் பெற்றார். இதய கோயில், உதய கீதம், கேளடி கண்மணி, சேது, பாரதி, காசி உள்ளிட்ட படங்களில் பாடல்கள் எழுதிய இவர், தமிழக அரசின் சிறந்த நுால் பரிசு, சாகித்ய அகாடமி விருதுகளை பெற்றுள்ளார்.
இவரது, 79வது பிறந்த தினம் இன்று!