PUBLISHED ON : பிப் 22, 2025 12:00 AM

பிப்ரவரி 22, 1956
சென்னை நுங்கம்பாக்கத்தில், ராபர்ட் அமிர்தராஜ் - மேகி தம்பதியின் மகனாக, 1956ல், இதே நாளில் பிறந்தவர் அசோக் அமிர்தராஜ்.
இவர், சிறுவயதில் தன் அண்ணன்களான விஜய், ஆனந்தை பின்பற்றி டென்னிஸ் விளையாட்டில் ஆர்வ மானார். சென்னை டான்பாஸ்கோ பள்ளி, லயோலா கல்லுாரியில் படித்தார். டென்னிசில் படிப்படியாக மாநில, தேசிய எல்லைகளை கடந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்றார்.
கடந்த 1974ல், விம்பிள்டன் ஜூனியர்ஸ் போட்டியின் இறுதி போட்டியாளராகவும், 1978ல் உலக டென்னிசின் சாம்பியனாகவும் தேர்வானார். பின், அமெரிக்காவில் குடியேறி, ஹெச்.பி.ஓ., கேபிள் நிறுவன பங்குதாரராக மாறினார். ஹாலிவுட் படங்களை தயாரிக்க களமிறங்கி, டபுள் இம்பாக்ட் படத்தை தயாரித்து வெற்றி பெற்றார்.
தொடர்ந்து, 'ஹைட் பார்க் என்டர்டெயின்மென்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி, ஒரிஜினல் சின், கோஸ்ட் ரைடர், ஷாப் கேர்ள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஆங்கில திரைப்படங்களுடன், ஜீன்ஸ் தமிழ் திரைப்படத்தையும் தயாரித்து உள்ளார்.
இவரது 69வது பிறந்த தினம் இன்று!

