PUBLISHED ON : மார் 06, 2025 12:00 AM

மார்ச் 6, 1954
புதுச்சேரியில், சாம்பசிவனார் - மனோன்மணி தம்பதியின் மகனாக, 1954ல் இதே நாளில் பிறந்தவர் அறிவுடைநம்பி.
இவர், புதுச்சேரியில் இளநிலை அறிவியல் பட்டப்படிப்பை முடித்து, தமிழில் முதுகலை, முனைவர், முதுமுனைவர் பட்டங்களை பெற்றார். புதுவை பல்கலையில் ஓலைச்சுவடிகள், அரிய கையெழுத்து சுவடிகள் துறையின் தலைவராக பணியாற்றினார்.
இவர், 18 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது, இவரது வழிகாட்டுதலில், 14 பேர் முனைவர் பட்டமும், 64 பேர் இளம் முனைவர் பட்டங்களையும் பெற்றனர். இவர் எழுதிய, 'புத்துலக சிந்தனைகள், உள்ளங்கவர் ஓவியம், திருக்கோயில் வளர்க்கும் ஓவியக்கலை, சைவமும் வாழ்வியலும், ஒப்பிலக்கிய நோக்கில் தமிழ் இலக்கியம்' உள்ளிட்ட நுால்கள் ஆய்வாளர்களிடம் பிரபலமடைந்தன. இவர், தன் 60வது வயதில், 2014 ஜனவரி 3ல் மறைந்தார்.
ஆய்வு தமிழ் வளர்த்த, புதுவை தமிழறிஞர் பிறந்த தினம் இன்று!