PUBLISHED ON : மார் 08, 2025 12:00 AM

மார்ச் 8, 1974
துாத்துக்குடியில், விடுதலை போராட்ட வீரர் ஜே.பி.ரோட்ரிக்ஸ்சின்மகனாக, 1927, ஆகஸ்ட் 5ல் பிறந்தவர் ஜே.பி.சந்திரபாபு.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதால், இவரது தந்தையின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, குடும்பத்தை இலங்கைக்கு நாடு கடத்தியது பிரிட்டிஷ் அரசு. அங்கு, செயின்ட் ஜோசப் கல்லுாரியில் படித்த சந்திரபாபு, 16வது வயதில் சென்னை திரும்பினார்.
கடந்த 1947ல் வெளியான, தன அமராவதி திரைப்படத்தில் அறிமுகமானார். 1950களில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் படங்களில் நகைச்சுவை நடிகராக பிரபலமானார். ஆடல், பாடல், நடிப்பு, நகைச்சுவை என பல தளங்களிலும் இயங்கினார்.
இவர் பாடிய, 'பிறக்கும் போதும் அழுகின்றான், ஒண்ணுமே புரியலே உலகத்திலே, நான் ஒரு முட்டாளுங்க, வெற்றி பெற்ற மனிதரெல்லாம், பம்பரக் கண்ணாலே' உள்ளிட்ட பாடல்கள் இப்போதும் பிரபலம். போதையில் மூழ்கிய இவர், தன் 47வது வயதில், 1974ல் இதே நாளில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!