PUBLISHED ON : மார் 10, 2025 12:00 AM

மார்ச் 10, 1933
மதுரையில், தமிழ் சங்க செயலர் மற்றும் திருவள்ளுவர் கழக நிறுவனரான பழனியப்பன் - பிரமு அம்மாள் தம்பதியின் மகனாக, 1933ல் இதே நாளில் பிறந்தவர், பழ.நெடுமாறன்.
மதுரை புனித சூசையப்பர் உயர் நிலை பள்ளி, அமெரிக்கன் கல்லுாரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகளில் படித்தார். அ.சிதம்பரநாதன், தெ.பொ.மீனாட்சிசுந்தரம், ராஜமாணிக்கம், அவ்வை துரைசாமி, அ.கி.பரந்தாமன் உள்ளிட்டோரிடம் படித்ததால் தமிழ் பற்றாளரானார்.
மதுரை மாவட்ட தமிழ் தேசிய கட்சியின் அமைப்பாளராக இருந்த இவர், முன்னாள் முதல்வர் காமராஜரின் எளிமையால் ஈர்க்கப்பட்டு, காங்கிரசில் சேர்ந்து, மாநில பொது செயலராக வளர்ந்தார். 1980ல், எம்.எல்.ஏ.,வாகவும் தேர்வானார்.
கடந்த 1982ல், இலங்கையின் யாழ்ப்பாணம் நுாலகம் எரிக்கப்பட்ட போது, அங்கு சென்று ஆய்வு செய்து, அப்போதைய தமிழக முதல்வர், எம்.ஜி.ஆரிடம் அறிக்கை அளித்தார். முன்னாள் பிரதமர் இந்திராவை, மதுரையில், தி.மு.க.,வினர் தாக்கியபோது, அவரை காப்பாற்றினார்.
இலங்கை தமிழர் போராட்டங்களுக்காக பலமுறை சிறை சென்றுள்ள இவரது, 92வது பிறந்த தினம் இன்று.