தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதே நாளில் அன்று/இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


PUBLISHED ON : பிப் 07, 2026 02:09 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 07, 2026 02:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிப்ரவரி 7: தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த ஞானமுத்து - பரிபூரணம் தம்பதியின் மகனாக, தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில், 1902ல், இதே நாளில் பிறந்தவர், தேவநேய பாவாணர். இவர் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து, பலரின் உதவியுடன் பல ஊர்களில் பள்ளி படிப்பை முடித்து, தமிழ் வித்வான் மற்றும் தமிழில் முதுகலை பட்டம் பெற்றார்.

ஆங்கிலம், சமஸ்கிருத மொழிகளில் புலமை பெற்ற இவர், மன்னார்குடி மற்றும் திருச்சியில் தமிழாசிரிய ராகவும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில், திராவிட மொழி ஆராய்ச்சி துறையிலும் பணியாற்றினார். அகரமுதலி திட்ட இயக்குநராகவும், உலக தமிழ் கழகத்தின் நிறுவன தலைவராகவும் இருந்தார்.

உலக செம்மொழிகளிலேயே தமிழ்தான் தனித்து இயங்கும் தன்மை உடையது என்பதை தன் ஆராய்ச்சிகளின் வாயிலாக நிரூபித்தார். 40க்கும் மேற்பட்ட ஆய்வு நுால்களை எழுதினார். 1981 ஜன., 5ல், மதுரை உலகத்தமிழ் மாநாட்டில் கட்டுரை வாசித்தவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தன், 78வது வயதில், 1981, ஜனவரி 15ல் மறைந்தார்.

இவரது பிறந்த தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us