PUBLISHED ON : அக் 01, 2024 12:00 AM

அக்டோபர் 1, 1936
இலங்கையின் மட்டக்களப்பு பகுதியில் உள்ள சிங்களவாடியில்,கைலாயர் செல்லநயினார் -தங்கத்திரவியம் தம்பதியின் மகனாக,1936ல் இதே நாளில் பிறந்தவர், கே.எஸ்.சிவகுமாரன்.
இவர், இலங்கையின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பி.ஏ., வரை படித்து, சென்னை பல்கலையில் எம்.ஏ., ஆங்கில இலக்கியம் படித்தார். புனே திரைப்பட கல்லுாரியில் திரைப்பட வேதியியல் முடித்தார். 'டில்லி நியூஸ், தி ஐலண்ட், வீரகேசரி, நவமணி' உள்ளிட்ட பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்.
இலங்கை, ஓமன், இந்தியாவிலும் பல்வேறு பத்திரிகைகளில் தமிழ் சினிமா, இலக்கியம், இலக்கணம் குறித்து திறனாய்வு கட்டுரைகளை எழுதினார். இலங்கை வானொலி, தொலைக்காட்சிகளில் தமிழ் செய்தி தொகுப்பாளர், செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார். பன்னாட்டு தமிழர்களின் பண்பாடு, அரசியல் சார்ந்த திறனாய்வு கட்டுரைகள், சிறுகதை, நாடகம், கவிதை உள்ளிட்ட படைப்புகளை எழுதி, பல விருதுகளை பெற்ற இவர், 2022, செப்டம்பர் 15ல் தன் 86வது வயதில் மறைந்தார்.
அலைகடலுக்கு அப்பால், ஆங்கில ஊடகங்களில் தமிழர்களின் தொன்மை பேசிய ஈழ அறிஞர் பிறந்த தினம் இன்று!