தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதே நாளில் அன்று/ இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


PUBLISHED ON : அக் 09, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 09, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அக்டோபர் 9, 1989

திருச்சியில், கோதண்டபாணி -- ஆனந்தவள்ளி தம்பதிக்கு மகனாக, 1922, நவம்பர் 14ல் பிறந்தவர்சீனிவாசன். இவர், திருச்சியில் படித்து,அங்கேயே ரயில்வேயில் எழுத்தராகசேர்ந்தார். திருச்சியில், 'ஞாயிறு இலக்கியக் கழகம்' என்ற அமைப்பையும், 'ஞாயிறு' என்ற கையெழுத்து இதழையும் நடத்தினார்.

பின், சென்னையில் குடியேறி கதை, கட்டுரைகள்எழுதினார். 'தாய்நாடு' வார இதழின் ஆசிரியராக பணியாற்றினார். இவரது, 'ஆடும் மாடும், ஊர்ந்ததுஉயர்ந்தால், வளர்ச்சியும் மலர்ச்சியும்' ஆகிய புதினங்கள் புகழ் பெற்றவை. நீதிக் கட்சியில் சேர்ந்தஇவர், தி.மு.க., தோன்றியபின் அதில் இணைந்தார்.

விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டத்துக்காக, மூன்று மாத சிறை தண்டனை பெற்றார்.ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வான இவர், பாடநுால் நிறுவன மேலாண்மை இயக்குனர், தமிழகதிட்டக்குழு தலைவராகவும் பணியாற்றினார். அரசியல் உலகின் தத்துவ மேதை என புகழப்பட்ட இவர், 1989ல் தன், 67வது வயதில், இதே நாளில் மறைந்தார்.

தி.மு.க., செய்தி தொடர்பு செயலர் டி.கே.எஸ். இளங்கோவனின் தந்தை மறைந்த தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us