PUBLISHED ON : அக் 16, 2024 12:00 AM

அக்டோபர் 16, 1952
சென்னை, மயிலாப்பூரில் இந்தியன்வங்கி அதிகாரி ரங்காச்சாரி -- பத்மா தம்பதியின் மகனாக, 1952ல், இதே நாளில் பிறந்தவர் மோகன்.
சென்னை, கிண்டி கல்லுாரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தபோது, 'கிரேட் பேங்க் ராபெரி' எனும் நாடகத்துக்கு கதை எழுதி, ஒருங்கிணைப்பாளராகவும்,நடிகராகவும் தோன்றினார். நிகழ்ச்சியின் நடுவராக வந்த கமல், இவருக்கு சிறந்த எழுத்தாளருக்கான பரிசை அளித்தார்.
படிப்பு முடிந்து, தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபடியே பல்வேறு நாடக நிறுவனங்களுக்கு கதை, வசனம் எழுதினார். எஸ்.வி.சேகரின், 'கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்' எனும் நாடகத்தில் நடித்து, 'கிரேஸி' மோகன் ஆனார்.
கே.பாலச்சந்தரின், பொய்க்கால் குதிரை படத்திற்குவசனம் எழுதினார். தொடர்ந்து, அபூர்வ சகோதரர்கள்,மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், சின்ன மாப்ளே,சதி லீலாவதி, அவ்வை சண்முகி, அருணாச்சலம், நான் ஈ உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம், நகைச்சுவைபகுதிகளை எழுதி, நடித்த இவர், 2019, ஜூன் 10ல் தன், 67வது வயதில் திடீர் மாரடைப்பால் காலமானார்.
எழுத்தாலும், பேச்சாலும், சிரிக்கவும், சிந்திக்கவும்வைத்த கலைஞன் பிறந்த தினம் இன்று!