PUBLISHED ON : அக் 18, 2024 12:00 AM

அக்டோபர் 18, 1882
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், சமஸ்கிருத பண்டிதரும், வைத்தியரும் ஆன வெங்கோபாச்சாரின் மகனாக, 1882ல், இதே நாளில் பிறந்தவர் சஞ்சீவராவ்.
இவரது தந்தை, இசை கலைஞரும்,ஜமீன்தாருமான சத்கல சேலம் நரசய்யாவின் நோயை தீர்த்தார். இதனால், சஞ்சீவராவுக்கும், இவரது அண்ணனுக்கும் நரசய்யா இசை பயிற்சி அளித்தார். பின், சென்னையில் குடியேறிய இவர், கரூர் தேவுடு அய்யர், சீர்காழி நாராயணசுவாமி பிள்ளை உள்ளிட்டோரிடம் வயலின் கற்று, தன், 12வது வயதில் கச்சேரி செய்தார்.
பார்வையற்ற சரப சாஸ்திரியின் புல்லாங்குழல் கச்சேரியால் ஈர்க்கப்பட்டு, அவரிடம் ஏழாண்டுகள்புல்லாங்குழல் வாசிக்க கற்றார். அவரது மறைவுக்குபின், அவரின் புல்லாங்குழலில் வாசிக்க துவங்கினார்.கர்நாடக இசை வாத்தியமாக ஏற்கப்படாமல் இருந்த புல்லாங்குழலை, லாவகமாக பயன்படுத்திஏற்க வைத்தார்.
மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி, இந்தியன்பைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் சங்கீத கலாசிகாமணி உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், 1962, ஜூலை 11ல் தன், 79வது வயதில் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று!