PUBLISHED ON : அக் 20, 2024 12:00 AM

அக்டோபர் 20, 1974
கோவை மில்லில், ஸ்பின்னிங் மாஸ்டராக இருந்த பாலகிருஷ்ணன் - ஆசிரியை சரஸ்வதி தம்பதிக்கு, 1974ல் இதே நாளில் பிறந்தவர் பா.விஜய். இவரது சொந்த ஊர், அரியலுார் மாவட்டம், உட்கோட்டை. கோவையில் பள்ளி படிப்பை முடித்தவர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் எம்.ஏ., - பி.லிட்., முடித்தார்.
இயக்குனர் பாக்யராஜின், ஞானப்பழம் படத்தில், 'மணிமாடக் குயிலே நீ' என்ற பாடல் வாயிலாக பாடல் ஆசிரியர் ஆனார். நீ வருவாய் என, வானத்தை போல, தெனாலி, வெற்றிக்கொடி கட்டு, பாய்ஸ் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.
மேலும், 'இந்த சிப்பிக்குள், நந்தவனத்து நட்சத்திரங்கள், உடைந்த நிலாக்கள், சில்மிஷியே' உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நுால்களை எழுதி உள்ளார். 'ஒவ்வொரு பூக்களுமே...' பாடலுக்கு தேசிய விருது, தமிழக அரசின், 'கலைமாமணி' உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவரின், 51வது பிறந்த தினம் இன்று!