PUBLISHED ON : நவ 16, 2024 12:00 AM

நவம்பர் 16, 1985
கோவை மாவட்டம், பொள்ளாச்சிஅருகில் உள்ள செங்குட்டை பாளையத்தில், பெரியண்ண கவுண்டர் - நஞ்சம்மையார் தம்பதியின் மகனாக, 1898, மார்ச் 11ல் பிறந்தவர் சின்னுக்கவுண்டர் எனும் சித்பவானந்தர்.
இவர் பொள்ளாச்சி, கோவையில் பள்ளி படிப்பு, சென்னையில் கல்லுாரிபடிப்பை முடித்தார். பொள்ளாச்சிக்கு வந்த பழனி சாது சாமியாரின் அறிமுகத்தால், ஆன்மிகத்தில்நாட்டம் ஏற்பட்டது. இவர், மேற்படிப்புக்காக பிரிட்டன் செல்ல இருந்த சூழலில், சுவாமி விவேகானந்தரின், 'சென்னை சொற்பொழிவுகள்' என்ற நுாலை படித்து, பயணத்தை ரத்து செய்தார்.
பேலுார் ராமகிருஷ்ண மடத்தின் சிவானந்தரிடம்தீட்சை பெற்று, 'சித்பவானந்தர்' ஆனார். திருப்பராய்த்துறை துவக்க பள்ளி, ராமகிருஷ்ண தபோவனம், விவேகானந்தர் மாணவர் விடுதி உள்ளிட்ட குருகுல பள்ளிகளையும், ராமகிருஷ்ணமடம், சாரதா தேவி சமிதிகளையும் உருவாக்கினார்.
'தர்ம சக்கரம்' இதழில் பகவத் கீதை, திருவாசகம்நுால்களுக்கான விளக்கத்தையும், சிறுவர்களுக்கானகதைகள், நாடகங்களையும் எழுதிய இவர், 1985ல் தன், 87வது வயதில் இதே நாளில் சித்தி அடைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!

