PUBLISHED ON : நவ 27, 2024 12:00 AM

நவம்பர் 27, 2023
மதுரையில், நடேசன் பிள்ளை - சம்பூர்ணம் தம்பதியின் மகனாக,1933 மார்ச் 19ல் பிறந்தவர் பொன்னுசாமி.
இவர், தன் தந்தையிடம் நாதஸ்வர இசையை கற்றார். எட்டு தலைமுறைகளாக, மீனாட்சியம்மன் கோவிலின் கர்ப்பகிரகத்தில் நாதஸ்வரம் வாசித்த பரம்பரையில் வந்தவர் என்பதால், தன் 7வது வயதில், அண்ணன் எம்.பி.என்.சேதுராமனுடன் இணைந்து, மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்நாதஸ்வரம் வாசித்து, முதல் கச்சேரியைதுவக்கினார்.
தொடர்ந்து, கோவில் மற்றும் சுப நிகழ்ச்சிகளை தன் நாதஸ்வர இசையால் மங்களகரமாக்கினார்.தில்லானா மோகனாம்பாள் படத்தில், சிவாஜிக்காக,தன் அண்ணன் சேதுராமனுடன் இணைந்து நாதஸ்வரம் வாசித்தார்.
காந்தி, நேரு, ராஜேந்திர பிரசாத், காமராஜர், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலையில் வாசித்த பெருமைக்குரியவர். 'கலைமாமணி, சங்கீத சூடாமணி, நாதஸ்வர கலாநிதி, இசை பேரறிஞர்' உள்ளிட்ட விருதுகளைபெற்ற இவர், 2023ல் தன் 90வது வயதில், இதே நாளில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!

