PUBLISHED ON : டிச 03, 2024 12:00 AM

டிசம்பர் 3, 1884
பீஹார் மாநிலம், ஷிவான் எனும் ஊரில், மகாவீர் சாகி - கமலேஸ்வரி தேவி தம்பதியின் மகனாக, 1884ல் இதே நாளில் பிறந்தவர் ராஜேந்திர பிரசாத்.
இவர், இஸ்லாமிய மவுலவி ஒருவரிடம் பெர்சியம், ஹிந்தி, கணிதம் படித்தார். கோல்கட்டா பல்கலையில் பொருளியல் பட்டம் பெற்ற இவர், பல கல்லுாரிகளில் பேராசிரியர் மற்றும் முதல்வராகவும், சட்டத்துறையில் முனைவர் பட்டம் பெற்று, வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.
காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்.பீஹார் நிலநடுக்கத்தின்போது, 38 லட்சம் ரூபாய் நிதி திரட்டினார்.
'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தின்போது சிறை சென்றார். காங்கிரஸ் தலைவரான இவர், சுதந்திரத்துக்கு பின் அரசியல் சாசன குழுவுக்குதலைமை ஏற்றார். நாட்டின் முதல் ஜனாதிபதியாக தேர்வானார். தன் சிறப்பான பணிக்காக, 'பாரத ரத்னா' விருது பெற்றவர், 1963, பிப்ரவரி 3ல் தன் 79வது வயதில் மறைந்தார்.
தொடர்ந்து இரண்டு முறை ஜனாதிபதியான, 'பாபு' ராஜேந்திர பிரசாத் பிறந்த தினம் இன்று!