தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதே நாளில் அன்று/ இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று


PUBLISHED ON : டிச 06, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 06, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டிசம்பர் 6, 1934

ஆந்திர மாநிலம், சிறாவூரில், நிசங்கரகுருவையா ரெட்டி - சுபத்திரம்மா தம்பதியின் மகளாக, 1934ல், இதே நாளில் பிறந்தவர், சசிகலாவாணி எனும் சாவித்ரி.

சிறுவயதில், கர்நாடக இசை வல்லு நரான சிஸ்டா பூர்ணையா சாஸ்திரியிடம் இசை, பரதநாட்டியம் கற்று, மேடைகளில் பாடி, நடித்து பாராட்டப்பட்டார். தன் 12வது வயதில், தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமான இவர், சென்னை வந்து, சம்சாரம், பாதாள பைரவி உள்ளிட்ட படங்களில் சிறுவேடங்களில் நடித்தார்.

தன், 16வது வயதில், தேவதாஸ் படத்தின் நாயகியானார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி உள்ளிட்டோருடன் அபாரமாக நடித்தார். களத்துார்கண்ணம்மா, பாசமலர், பாவ மன்னிப்பு, கர்ணன், நவராத்திரி, திருவிளையாடல், சரஸ்வதி சபதம் உள்ளிட்ட படங்களைரசிகர்கள் கொண்டாடினர்.

இவர், ஏற்கனவே திருமணமான ஜெமினி கணேசனை மணந்து, பிரிந்தார். தான் சம்பாதித்த பெயர், புகழ், பணம், சொத்துடன், நினைவையும்இழந்து, 1981, டிசம்பர் 26ல் தன் 47வது வயதில் மறைந்தார்.

'நடிகையர் திலகம்' பிறந்த தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us