PUBLISHED ON : டிச 15, 2024 12:00 AM

டிசம்பர் 15, 1913
உத்தர பிரதேச மாநிலம், பிருந்தாவனம் என்ற ஊரில், காஞ்சிபுரத்தை பூர்வீகமாக கொண்ட ஸ்ரீரங்காச்சாரியார் - ருக்மணி தம்பதியின் மகனாக, 1913ல் இதே நாளில் பிறந்தவர் ஸ்ரீனிவாசாச்சாரியார்.
இவர், தந்தையிடம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, சமஸ்கிருத மொழிகளையும், இலக்கியங்களையும், வைணவ நுால்களையும் கற்றார். இளம் வயதில் உடல்நலம் குன்றியதால், சென்னைக்கு வந்து பச்சையப்பன் பள்ளியில் படித்தார்.
சென்னை, ஹிந்தி பிரசார சபா அச்சகத்தில் பணியாற்றினார். அங்கு தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளை கற்றார். பெரம்பூரில் ஹிந்தி ஆசிரியராகவும் பணியாற்றினார். 1937ல், காந்தி சென்னை வந்தபோது, உ.வே.சாமிநாத அய்யரின் தமிழ் உரையை ஹிந்தியில் மொழி பெயர்த்தார்.
அப்போது, கி.வா.ஜ.,வின் அறிமுகம் கிடைக்க, 'கலைமகள்' இதழ் ஆசிரியர் குழுவில் இணைந்தார்.மராட்டிய எழுத்தாளர் காண்டேகரின், 13 இலக்கியங்களை தமிழில் மொழி பெயர்த்தார். பாரதியார், ஆர்.சூடாமணி, மாதவையா, சிதம்பர சுப்பிரமணியன்உள்ளிட்டோரின் தமிழ் படைப்புகளை மராத்தி, ஹிந்திக்கு மொழி பெயர்த்தார். தன் 86வது வயதில், 1999 ஜூலை 28ல் மறைந்தார்.
பன்மொழி பாவலர் பிறந்த தினம் இன்று!