PUBLISHED ON : டிச 17, 2024 12:00 AM

டிசம்பர் 17, 1935
தஞ்சாவூர் மாவட்டம், உமையாள்புரத்தில், காசி விஸ்வநாத அய்யர் - கமலாம்பாள் தம்பதியின் மகனாக, 1935, டிசம்பர் 17ல் பிறந்தவர் சிவராமன். இவர், ஆறுபாதி நடேச அய்யர், தஞ்சாவூர் வைத்தியநாத அய்யர், பாலக்காடு மணி அய்யர், கும்பகோணம் ரங்கு அய்யங்கார் ஆகியோரிடம் மிருதங்கம் வாசிக்க கற்றார். தன் 10வது வயதில் அரங்கேற்றம் செய்தார்.
சர்வதேச இசை கலைஞர்களுடன் இணைந்து, ஜுகல்பந்தி இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். பிலிம்பேர் உள்ளிட்ட விழாக்களில் தாள வாத்தியகச்சேரி நிகழ்த்தியுள்ள இவர், மிருதங்க சக்கரவர்த்திதிரைப்படத்துக்காகவும் வாசித்துள்ளார்.
வெளிநாட்டு அரசு விழாக்களில், இந்தியாவின் சார்பில் மிருதங்கம் வாசித்துள்ள இவர், 'பைபர் கிளாஸ்' மிருதங்கத்தை உருவாக்கியுள்ளார். சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் ஆஸ்தான வித்வானாகவும் உள்ளார்.
சங்கீத நாடக அகாடமி, கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகள் பெற்றவரின், 89வது பிறந்த தினம் இன்று!

