PUBLISHED ON : டிச 18, 2024 12:00 AM

டிசம்பர் 18, 1953
திருவாரூர் மாவட்டம் இடும்பாவனத்தில், கிருஷ்ணசாமி - பார்வதி தம்பதியின் மகனாக, 1953ல் இதே நாளில் பிறந்தவர் அறிவழகன் என்ற சாரு நிவேதிதா.
இவர், தஞ்சையில் பி.எஸ்சி., இயற்பியல் படித்தபோது, தட்டச்சு, சுருக்கெழுத்து தகுதியால் மத்திய அரசு பணியில்சேர்ந்தார். டில்லி பொது வினியோக துறை, சென்னை தபால் துறை மேலாளர் அலுவலகங்களில்உதவியாளராக பணியாற்றினார்.
'சாவி' இதழில் நிவேதிதா என்ற புனை பெயரில்,'கனவுகள் சிதைதல்' என்ற தலைப்பில் எழுதினார்.தொடர்ந்து, 'தினமலர் -- வாரமலர்' இதழில் எழுதினார். பிரபல எழுத்தாளர்களின் படைப்புகளில்உள்ள தன்னரசியலை விமர்சித்து, சிற்றிதழ்களில் எழுதினார்.
விகடனில், 'கோணல் பக்கங்கள்' எழுதி, தனக்கான வாசகர் வட்டத்தை உருவாக்கினார்.'பழுப்பு நிற பக்கங்கள், ஜீரோ டிகிரி, எக்ஸைல், கடவுளும் நானும்' உள்ளிட்ட இவரது பல படைப்புகள் முக்கியமானவை. இவரது பல படைப்புகள் மலையாளம், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இவரது 71வது பிறந்த தினம் இன்று!