PUBLISHED ON : ஜன 03, 2025 12:00 AM

ஜனவரி 3, 1945
இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனர் டி.எஸ்.நாராயணசாமியின் மகனாக, திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில், 1945ல் இதே நாளில் பிறந்தவர் ஸ்ரீனிவாசன்.
இவர், சென்னையில் பள்ளி, கல்லுாரிபடிப்பை முடித்து, அமெரிக்காவின் இல்லினாய்ஸ் தொழில்நுட்ப கழகத்தில் வேதியியல்தொழில்நுட்பம் படித்தார். படிக்கும்போதே தந்தையை இழந்ததால், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பொறுப்புகளை ஏற்றார்.
துணிச்சலான முடிவுகளாலும், ஆற்றல் மிக்கசெயல்பாடுகளாலும் வணிக உலகில் தன் பெயரைநிலை நிறுத்தினார். 'மெட்ராஸ் சேம்பர் ஆப் காமர்ஸ்அண்டு இண்டஸ்ட்ரி'யின் தலைவர், சிமென்ட் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர், பிரதமரின் வர்த்தக மற்றும் தொழில் கவுன்சில் உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தார்.
கடந்த 2011 - 14ல், இந்திய கிரிக்கெட் சங்க தலைவராக தேர்வானார். தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியை வாங்கினார். சர்வதேச கோல்ப் மற்றும் செஸ் விளையாட்டுகளுடன், உலக ஸ்குவாஷ் சங்கத்திலும் உயர் பதவிகளை வகிக்கிறார்.
இவரது 80வது பிறந்த தினம் இன்று!

