PUBLISHED ON : ஜன 08, 2025 12:00 AM

ஜனவரி 8, 1975
சென்னையில் திரைப்படங்களுக்கு கிடார் வாசித்த எஸ்.எம்.ஜெயராஜின் மகனாக, 1975ல் இதே நாளில் பிறந்தவர் ஹாரிஸ் ஜெயராஜ். தன் தந்தையை போல, இவரும் இசை துறையில் பணியாற்ற விரும்பினார். தன் குரல் பாடுவதற்கு ஏற்றதாக இல்லை என்பதை உணர்ந்த இவர், இசைஅமைப்பாளராகும் ஆசையில் கிடார், கீ போர்டு இசைக்க கற்றார்.
ஏ.ஆர்.ரஹ்மான், ராஜ்கோட்டி, மணிசர்மா, கார்த்திக் ராஜா, வித்யாசாகர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி திரைப்பட இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினார். 2001ல், மின்னலே படத்தின் வாயிலாக இசையமைப்பாளராக அறிமுகமானார்.
அப்படத்தின், 'வசீகரா, அழகிய தீயே' உள்ளிட்டபாடல்கள் பிரபலமடைந்தன. தொடர்ந்து, சாமி, காக்க காக்க, அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு, உன்னாலே உன்னாலே, வாரணம் ஆயிரம், அயன், ஏழாம் அறிவு, துப்பாக்கி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து, பிரபலமானார்.
பல்வேறு விளம்பரங்களுக்கும், தமிழக அரசின் விழிப்புணர்வு படங்களுக்கும் இசையமைத்துள்ளார். 'கலைமாமணி, பிலிம்பேர், மேஸ்ட்ரோ' உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளவரின், 50வது பிறந்த தினம் இன்று!

