PUBLISHED ON : ஜன 10, 2025 12:00 AM

ஜனவரி 10, 1940
கேரள மாநிலம், போர்ட் கொச்சி அருகில் உள்ள கட்டச்சேரியில், அகஸ்டீன் ஜோசப் - அலைஸ்குட்டி தம்பதியின் மகனாக, 1940ல் இதே நாளில் பிறந்தவர் கே.ஜே.ஏசுதாஸ்.
இவரது தந்தை செவ்விசைக் கலை ஞர் என்பதால் அவரிடம் இசை கற்றார். பின், திருப்புணித்துறை அகாடமி, வேச்சூர் ஹரிகரசுப்பிரமணிய அய்யர், செம்பை வைத்தியநாத பாகவதர் உள்ளிட்டோரிடம் கர்நாடக இசை மற்றும் ஹிந்துஸ்தானி இசை கற்றார்.
மலையாளத்தில், கால்பாடுகள் தமிழில், கொஞ்சும் குமரி ஹிந்தியில், ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்ற படங்களில் பின்னணி பாடி அறிமுகமானார்.
'ஹரிவராசனம்...' பாடலை சபரிமலை அய்யப்பனுக்கு அர்ப்பணித்துள்ளார். இவர், அனைத்து இந்திய மொழிகளிலும், 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். எட்டு தேசிய விருதுகள், 'பத்ம பூஷண், பத்ம விபூஷண்' உள்ளிட்ட உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
'விழியே கதையெழுது, கண்ணே கலைமானே, அகரம் இப்போ, என் இனிய பொன் நிலாவே' உள்ளிட்ட பாடல்களால், இன்றும் நம்மை மயக்கும், 'காந்தர்வக் குரலோனின்' 85வது பிறந்த தினம் இன்று!

