PUBLISHED ON : ஜன 14, 2025 12:00 AM

ஜனவரி 14, 1887
தஞ்சாவூரில், கோதண்டராம அய்யர் - பகீரதம்மாள் தம்பதியின் மகனாக, 1887ல் இதே நாளில் பிறந்தவர் நடேசய்யர். இவர், திருவாரூர் திரு.வி.க., கல்லுாரியில் படித்தார். தமிழ், ஆங்கிலத்தில் புலமை பெற்றார்.
தமிழர்கள், பிரிட்டிஷ் அரசை மீறி வணிகம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்த, 'பாரத மித்ரன்' என்ற இதழை துவக்கினார். தஞ்சை அரிசி ஆலை முதலாளிகளை இணைத்து சங்கம் துவக்கினார். அதை விரிவாக்க இலங்கையின் கொழும்புவுக்கு சென்றார். அங்கு, தேயிலை தோட்டத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருப்பதை அறிந்து வருந்தினார். அவர்களுக்கு கல்வி புகட்டியதுடன், 'தேச நேசன்' எனும் முதல் தமிழ் நாளிதழையும், 'தி சிட்டிசன்' எனும் ஆங்கில இதழையும் துவக்கினார்.
மலையகத்தின் எம்.எல்.ஏ., ஆகி, அடிமை தமிழர்களை விடுவித்தார். 'இந்தியா - இலங்கை ஒப்பந்தம், கதிர்காமம், வெற்றியுனதே' உள்ளிட்ட நுால்களை எழுதியவர், 1947 நவ., 7ல் தன் 60வது வயதில் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!

