PUBLISHED ON : பிப் 15, 2025 12:00 AM

பிப்ரவரி 15, 1923
சென்னை, பெரம்பூரில், நாகைநாதரின் மகளாக, 1923ல், இதே நாளில் பிறந்தவர் சத்தியவாணி.
இவர், எழும்பூர் அரசு பள்ளியில் 10ம் வகுப்பு முடித்து, ஹோமியோபதி மருத்துவம் படித்தார். அம்பேத்கரின், அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பில் சேர்ந்த இவர், பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டார்.
கடந்த 1949ல், தி.மு.க., துவங்கியபோது, அதில் இணைந்தார். ஹிந்தி எதிர்ப்பு, குலக்கல்வி திட்டத்துக்கு எதிராகப் போராடி கைதானார். பெரம்பூர் தொகுதியில் மூன்று முறை எம்.எல்.ஏ.,வானார்.
தி.மு.க., அரசில் ஹரிஜன துறை அமைச்சராகி, பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, குழந்தைகள் நல மையம், மாணவர் விடுதிகள் உருவாக்கினார். கருணாநிதியுடன் முரண்பட்டு, தி.மு.க.,வில் இருந்து விலகி, தாழ்த்தப்பட்டோர் முன்னேற்ற கழகம் என்ற தனிக்கட்சி துவங்கி, பின், அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
கடந்த 1978ல் ராஜ்யசபா எம்.பி.,யாகி, பிரதமர் சரண்சிங்கின் மத்திய அமைச்சரவையிலும் இடம்பெற்றார். 1999, நவம்பர் 11ல், தன் 76வது வயதில் மறைந்தார்.
சத்தியவாணி முத்து பிறந்த தினம் இன்று!

