தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதே நாளில் அன்று/இதே நாளில் அன்று: நவ. 1

இதே நாளில் அன்று: நவ. 1

இதே நாளில் அன்று: நவ. 1


PUBLISHED ON : நவ 01, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 01, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நவம்பர் 1: மஹாராஷ்டிரா மாநிலம், சதாரா மாவட்டம், மஹூலி கிராமத்தில் அச்சுத் லட்சுமண் தபோல்கர் – தாராபாய் தம்பதியின் மகனாக, 1945ல் இதே நாளில் பிறந்தவர், நரேந்திர தபோல்கர்.

சதாராவில் பள்ளி படிப்பு, சாங்கிலியில் உயர் கல்வியை முடித்தவர், மிராஜ் அரசு மருத்துவக் கல்லுாரியில் மருத்துவம் படித்து, 1970-ல் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெற்றார்.

தொடர்ந்து, 12 ஆண்டுகள் மருத்துவராக பணியாற்றியவர், 1982 முதல் முழுநேர சமூகப் பணியில் ஈடுபட்டு, மூடநம்பிக்கைகள், போலி சாமியார்கள், மாந்திரீகம் ஆகியவற்றுக்கு எதிராக பிரசாரம் செய்தார். 1989-ல் மஹாராஷ்டிராவில் மூடநம்பிக்கை ஒழிப்பு அமைப்பை நிறுவினார்.

பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மை குறித்து 12 நுால்களை எழுதியுள்ளார். மஹாராஷ்டிரா அரசின் சிவ் சத்ரபதி, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுகளை பெற்றார்.

தன் 67வது வயதில், 2013 ஆகஸ்ட் 20-ல், புனே நகரில் காலை நடைபயிற்சி சென்ற இவரை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இவரது மறைவுக்கு பின், மூடநம்பிக்கை தடுப்பு சட்டத்தை மஹாராஷ்டிரா அரசு நிறைவேற்றியது.

இவரது பிறந்த தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us