தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதே நாளில் அன்று/இதே நாளில் அன்று: நவ. 13

இதே நாளில் அன்று: நவ. 13

இதே நாளில் அன்று: நவ. 13


PUBLISHED ON : நவ 13, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 13, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நவம்பர் 13, 1922

துாத்துக்குடி மாவட்டம், காட்டு நாயக்கன்பட்டியில், தாமோதர கணக்கு பிள்ளை – பேச்சியம்மாள் தம்பதியின் மகனாக, 1867 செப்டம்பர் 7-ல் பிறந்தவர் சங்கரன். தந்தையிடமும், பழனி தண்டபாணி சுவாமிகளிடமும் தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்றார்; இசை பயிற்சியும் பெற்றார்.

உப்பு பண்டகசாலையில் கணக்கராக பணியாற்றினார். நாடகத்தின் மீதான ஆர்வத்தால், தன் 24-வது வயதில் பணியை துறந்து நாடக நடிகரானவர், தொடர்ந்து நாடக ஆசிரியராகவும், இயக்கு நராகவும் உயர்ந்தார். ‘வள்ளி திருமணம், பவளக்கொடி சரித்திரம், சத்தியவான் சாவித்திரி, கோவலன் சரித்திரம், நள தமயந்தி, வீரபாண்டிய கட்ட பொம்மன்’ உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார்.

சிறுவர் நாடகக் குழுக்களை உருவாக்கி, எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் உள்ளிட்ட கலைஞர்கள் உருவாக வழிவகுத்தார். 1892-ல் துறவறம் மேற்கொண்டு, சங்கரதாஸ் சுவாமிகள் ஆனார். தமிழ் நாடக மேடைக்கு புதிய வடிவத்தையும், மொழி வளத்தையும் அளித்ததால், ‘தமிழ் நாடக தந்தை’ என போற்றப்பட்டார்.

நாடக ஆசிரியர், நடிகர், பாடலாசிரியர் என பல பரிமாணங்களை கொண்ட இவர், 1922-ல் இதே நாளில், தன் 55வது வயதில் மறைந்தார்.

இவரது நினைவு தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us