தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதே நாளில் அன்று/இதே நாளில் அன்று: நவ. 4

இதே நாளில் அன்று: நவ. 4

இதே நாளில் அன்று: நவ. 4


PUBLISHED ON : நவ 04, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 04, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நவம்பர் 4: கேரள மாநிலம், கண்ணுார் மாவட்டம், தலச்சேரியில் கிருஷ்ணன் – தேவகி அம்மாள் தம்பதியின் மகளாக, 1897ல் இதே நாளில் பிறந்தவர், இடவலத்து கக்காட்டு ஜானகி எனும் இ.கே.ஜானகி அம்மாள்.

தலச்சேரியில் பள்ளி படிப்பை முடித்து, சென்னை மாநிலக் கல்லுாரியில் தாவரவியலில் சிறப்பு பட்டம் பெற்றார். அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலையில், முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண் என்ற சிறப்பை பெற்றார்.

சென்னையில் ஆசிரியையாக பணியை தொடங்கினார். கோவை கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிலைய மரபியல் விஞ்ஞானியாக பணியாற்றி, அதிக இனிப்பு சத்தும், விளைச்சலும் கொண்ட கரும்பு ரகங்களை உருவாக்குவதில் முக்கிய பங்களித்தார். தாவரங்களின் ‘குரோமோசோம்’ அமைப்பு, மரபணு மாற்றங்கள் குறித்த இவரது ஆய்வுகள், சர்வதேச அளவில் தாவரவியலில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தின.

இந்திய தாவரவியல் ஆய்வு கழகத்தின் மறுசீரமைப்பில் முக்கிய பங்காற்றி, தேசிய அறிவியல் கழகத்தின் முதல் பெண் உறுப்பினராகவும் இருந்தார். பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், தன் 86-வது வயதில், 1984 பிப்ரவரி 7-ம் தேதி மறைந்தார்.

இவரது பிறந்த தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us