PUBLISHED ON : நவ 17, 2026 12:00 AM

நவம்பர் 17: ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிசில், துருக்கியைச் சேர்ந்த வங்கியாளர் மாரிஸ் அல்பாஸா – எகிப்தை சேர்ந்த மாதில்டே இஸ்மாலுான் தம்பதியின் மகளாக, 1878, பிப்ரவரி 21ல் பிறந்தவர், மிரா அல்பாஸா.
வீட்டிலும், தனியார் பள்ளியிலும் தொடக்கக் கல்வி பயின்றார். பின், பாரிசில் ஓவியக்கலை பயின்று, திறமையான ஓவியர், இசைக்கலைஞர், எழுத்தாளர் என புகழ் பெற்றார்.
ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட இவர், 1914ல் புதுச்சேரிக்கு வந்து, அங்கு ஆசிரமம் அமைத்து தங்கியிருந்த ஸ்ரீ அரவிந்தரை சந்தித்தார். அரவிந்தர் மறைவுக்கு பின், 1926ல் ஆசிரமத்தின் பொறுப்புகளை ஏற்றவர், 1952ல் ஸ்ரீ அரவிந்தர் சர்வதேச கல்வி மையத்தை தொடங்கினார். உலக மக்கள் ஒற்றுமையுடன் வாழும் நோக்கில், 1968ல் புதுச்சேரி அருகே, ‘ஆரோவில்’ என்ற சர்வதேச நகரை உருவாக்கினார்.
ஸ்ரீ அரவிந்தரின் தத்துவங்களையும், சிந்தனைகளையும் வளர்த்ததால், ‘அரவிந்தர் அன்னை’ என பக்தர்களால் அழைக்கப்பட்டார். ஆன்மிகம், கல்வி மற்றும் மனிதநேய பணிகளுக்கு தன் வாழ்வை அர்ப்பணித்த இவர், 1973ல் இதே நாளில், தன் 95வது வயதில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!
