தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதே நாளில் அன்று/இதே நாளில் அன்று: அக். 21

இதே நாளில் அன்று: அக். 21

இதே நாளில் அன்று: அக். 21


PUBLISHED ON : அக் 21, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 21, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அக்டோபர் 21: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், அ.ராமலிங்கம் –- சேது அம்மாள் தம்பதியின் மகனாக, 1946ல் இதே நாளில் பிறந்தவர், ராம.குருநாதன்.

கும்பகோணத்தில் பள்ளி, கல்லுாரி படிப்பை முடித்தவர், சென்னை பச்சையப்பன் கல்லுாரி மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் எம்.லிட்., – பிஎச்.டி., முடித்து, பச்சையப்பன் கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றி, ஓய்வு பெற்றார்.

கவிஞர்களான வைரமுத்து, வைகைச்செல்வன், நா.முத்துகுமார், கபிலன், பாரதிபாலன், சொற்பொழிவாளர் அரங்க.ராமலிங்கம் உள்ளிட்டோர் இவரது மாணவர்கள். இவரது வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் பெற்ற பலர் பேராசிரியர்களாகவும், எழுத்தாளர்களாகவும் புகழ் பெற்றுள்ளனர்.

சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை ஆராய்ந்து, ‘சங்கப் பாடல்களும் ஜப்பானியக் கவிதைகளும், ராம.குருநாதன் கவிதைகள்’ உட்பட பல நுால்கள், மொழிபெயர்ப்பு நுால்கள் உள்ளிட்டவற்றை எழுதியுள்ளார். ஹைக்கூ கவிதை போட்டிகளை நடத்தி, பலருக்கும் பரிசளித்து வருகிறார்.

இலக்கியத்தால் நற்பணி செய்யும் தமிழறிஞரின், 81வது பிறந்த தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us