தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதே நாளில் அன்று/இதே நாளில் அன்று: அக். 29

இதே நாளில் அன்று: அக். 29

இதே நாளில் அன்று: அக். 29


PUBLISHED ON : அக் 29, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 29, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அக்டோபர் 29, 1909

நாகை மாவட்டம், திருச்சிற்றம்பலத் தில், முத்தையா பிள்ளை – கவுரியம்மாள் தம்பதியின் மகனாக, 1909ல் இதே நாளில் பிறந்தவர், மு.அருணாசலம். திண்ணை பள்ளியை தொடர்ந்து, குத்தாலம் உயர்நிலை பள்ளி, சிதம்பரம் மீனாட்சி கல்லுாரியில் படித்தார்; கணிதத்தில் இளங்கலை, தமிழில் முதுகலை பட்டம் பெற்றார்.

காசி ஹிந்து பல்கலையில் பேராசிரியராகவும், தமிழ் – வடமொழி நிறுவனத்தின் இயக்குநராகவும், தஞ் சை தமிழ் பல்கலை அகராதி துறை தலைவராகவும் பணியாற்றினார். ஒன்பதாம் நுாற்றாண்டு முதல் 17ம் நுாற்றாண்டு வரையிலான தமிழ் இலக்கிய வரலாற்றை நுாற்றாண்டு வாரியாக ஆய்வு செய்து, 14 புத்தக தொகுதிகளாக வெளியிட்டு சாதனை படைத்தார்.

தமிழிசை இலக்கிய வரலாறு, தமிழிசை இலக்கண வரலாறு ஆகிய நுால்களை எழுதிய இவர், சொந்த ஊரில் காந்தி வித்யாலயம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை நிறுவி, ஏழை மாணவர்களின் கல்விக்கு தொண்டாற்றினார். 1991ல் தஞ்சை தமிழ் பல்கலை, மதிப்புறு முதுமுனைவர் பட்டத்தை இவருக்கு வழங்கியது.

தமிழ் ஆய்வு பணிக்காகவே தன்னை அர்ப்பணித்து கொண்ட இவர், தன் 83வது வயதில் 1992, நவம்பர் 23ல் காலமானார்.

இவரது பிறந்த தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us