PUBLISHED ON : ஜூலை 30, 2025 12:00 AM

  ஜூலை 30, 1958
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில், ராதாகிருஷ்ணன் - சந்திரா தம்பதியின் மகனாக, 1958ல் இதே நாளில் பிறந்தவர் பிரபாகர்.
இவர், பட்டுக்கோட்டையில் பள்ளிக் கல்வி, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரியில் எம்.காம்., படித்தார். படிக்கும்போதே நாடகங்களை எழுதி இயக்கினார். இவரது, 'அங்கே இங்கே எங்கே?' என்ற முதல் நாவல், ' மோனா' இதழிலும், 'மீண்டும் மீண்டும்' குறுநாவல் , 'சுஜாதா' பத்திரிகையிலும் வெளியாகின.
இதழியல் ஜாம்பவான்களான, சாவி, எஸ்.ஏ.பி., உள்ளிட்டோர், இவரை பாராட்டி, ஊக்குவித்தனர். காதல், வரலாறு, நகைச்சுவை என்று எழுதியவர், 'பரத் - சுசீலா' பாத்திரங்களுடன், துப்பறியும் நாவல்களை அதிகம் எழுதினார். இவரது, 'மரம்' சிறுகதையும், 'கனவுகள் இலவசம்' நாவலும் கல்லுாரிகளில் பாடமாகின. இவரது படைப்புகளை ஆய்வு செய்து, பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
திருக்குறளுக்கு, 'இரண்டு வரி காவியம்' என்ற தலைப்பில் உரை எழுதினார். கே.பாக்யராஜிடம் உதவி இயக்குநராகவும் இருந்த இவர், பல படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.
இவரது, 68வது பிறந்த தினம் இன்று!

