PUBLISHED ON : டிச 15, 2025 02:59 AM

டிசம்பர் 15, 1896
சேலம் மாவட்டம், ஆனையம்பட்டியில், நாகேஸ்வர அய்யர் - சாரதாம்பாள் தம்பதியின் மகனாக, 1896ல் இதே நாளில் பிறந்தவர், ஆதிசேஷய்யர்.
இவர், தன் தந்தையிடம் தமிழ் கற்று, கவிஞரானார். கர்நாடக சங்கீதம் கற்று, பல்வேறு கீர்த்தனைகளை இயற்றி, பாடினார்.
'முருகனை நினைந்துருகி, என்ன கவி பாடினாலும், வேலன் வருவாரடி, காவடியாடி வந்தால்' உள்ளிட்ட பாடல்களை எழுதினார். இவரது ஆழமான பக்தியை ரசித்த, சிருங்கேரி சங்கராச்சாரியார், 'புலவர் மணி' என்ற விருதையும், காஞ்சி சங்கராச்சாரியார், 'தமிழிசை மணி' என்ற விருதையும் வழங்கினர்.
இவரது பாடல்களை, கே.பி.சுந்தராம்பாள், ஜி.என்.பாலசுப்பிரமணியம், எம்.எல்.வசந்தகுமாரி உள்ளிட்ட பிரபல பாடகர்கள் பாடியுள்ளனர். 1975ல் துறவு பூண்டு, குஹானந்த பாரதியாக மாறியவர், வட சென்னிமலையில் பாலமுருகன் கோவில் எழுப்பினார். தன் ஊரில் தைப்பூச விழா எடுத்தவர், தன் 81வது வயதில், 1977, டிசம்பர் 2ல் முக்தி அடைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!

