sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 03, 2026 ,பங்குனி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

இதே நாளில் அன்று

/

 இதே நாளில் அன்று

/

 இதே நாளில் அன்று

 இதே நாளில் அன்று

 இதே நாளில் அன்று


PUBLISHED ON : ஜன 26, 2026 01:49 AM

Google News

PUBLISHED ON : ஜன 26, 2026 01:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜனவரி 26, 2015

கர்நாடகா மாநிலம், மைசூரில், ஆசிரியராக இருந்த, தமிழகத்தை சேர்ந்த, ராசிபுரம் கிருஷ்ணசாமியின் மகனாக, 1921, அக்டோபர் 24ல் பிறந்தவர், ஆர்.கே.லட்சுமண். இவர், சிறு வயதிலேயே, காண்பதை வரையும் திறமையுடன் வளர்ந்தார். அதை கண்ட வகுப்பாசிரியர், இவரை பாராட்டி, 'கார்ட்டூன்' எனும் கேலி சித்திரங்கள் வரையும் படி ஊக்கப்படுத்தினார். படிப்பை முடித்த பின், சென்னை, ஜெமினி ஸ்டுடியோவில் சிறிது காலம் பணி புரிந்த இவர், பின், 'குறவஞ்சி' எனும் கன்னட இதழில் கார்ட்டூன்கள் வரைந்தார். மும்பையில் இருந்து வெளியான, 'பிளிட்ஸ்' இதழில், கார்ட்டூனிஸ்டாக பணி புரிந்தார்.

தொடர்ந்து, 'பிரீ பிரஸ் ஜர்னல், பாரத் ஜோதி, பீப்பிள் சப்ளிமென்ட், டைம்ஸ் ஆப் இந்தியா' இதழ்களில் பணியாற்றினார். இவரின், 'காமன்மேன்' எனும் சாதாரண ஆள் பேசுவது போன்ற அரசியல் நையாண்டி படங்கள், சமகால அரசியலை விமர்சித்தன. இவரின் சகோதரரும், பிரபல எழுத்தாளருமான, ஆர்.கே.நாராயணனின், 'மால்குடி டேய்ஸ்' எனும் தொலைக்காட்சி தொடருக்காக, இவர் வரைந்த ஓவியங்கள் புகழ் பெற்றவை.

'பத்ம பூஷன், பத்ம விபூஷன், ரமோன் மகசேசே' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், தன், 93வது வயதில், 2015ல், இதே நாளில் மறைந்தார்.

இவரின் நினைவு தினம் இன்று!






      Dinamalar
      Follow us