தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இதே நாளில் அன்று/ இதே நாளில் அன்று

 இதே நாளில் அன்று

 இதே நாளில் அன்று


PUBLISHED ON : பிப் 23, 2026 01:22 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 23, 2026 01:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பிப்ரவரி 23, 1503

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், தாள்ளபாக்கம் கிராமத்தில், நந்தவாரிக எனும் தெலுங்கு பிராமண குடும்பத்தைச் சேர்ந்த சூரி - அக்கலாம்பா தம்பதியின் மகனாக, 1408, மே 9ல் பிறந்தவர் அன்னமாச்சாரியார்.

திருமால் பக்தரான இவர், திருப்பதி வெங்கடாஜலபதி மீது பக்தி பாடல்களை பாடினார். முதலில், பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற இசை உருப்படிகளுடன் பஜனை பாடல்களை தெலுங்கு மொழியில் அறிமுகம் செய்தார்.

இவர், 32,000க்கும் அதிகமான பாடல்களை எழுதினார். மேலும், 'சிருங்கார மஞ்சரி, வெங்கடேஸ்வர சதகம், சங்கீர்த்தன லட்சணம்' உள்ளிட்ட நுால்களை எழுதினார். செப்பு தகடுகளில் எழுதப்பட்ட இவரின் பல பாடல்கள், 1922ல் திருப்பதி கோவிலில் கண்டெடுக்கப்பட்டன.

'சுபத்ரா கல்யாணம்' என்ற நுாலை எழுதிய, தெலுங்கின் முதல் பெண் புலவராக போற்றப்படும் திம்மக்கா இவரின் மனைவி. இவரது மகன் பெரிய திருமலாச்சாரியார் மற்றும் பேரன் சின்னையா ஆகியோரும் இசைத் துறையில் புகழ் பெற்றனர். இவர், தன் 95வது வயதில், 1503ல் இதே நாளில் மறைந்தார்.

இவரது நினைவு தினம் இன்று!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us