PUBLISHED ON : மார் 27, 2026 03:21 AM

மார்ச் 27: வங்கதேசத்தின் டாக்காவை சேர்ந்த தந்தைக்கும், மேற்கு வங்கத்தின் பரித்பூரை சேர்ந்த தாய்க்கும் மகனாக, 1963ல் இதே நாளில் கொல்கட்டாவில் பிறந்தவர், பெடப்ரதா பெயின்.
கொல்கட்டாவில் உள்ள செயின்ட் லாரன்ஸ், சவுத் பாயின்ட் பள்ளிகள் மற்றும் காரக்பூர் ஐ.ஐ.டி.,யில் மின்னணுவியல் மற்றும் மின் தொடர்பு பொறியியல் படித்தார்.
தொடர்ந்து, அமெரிக்காவின் கொலம்பியா பல்கலையில், பிஎச்.டி., முடித்து, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'நாசா'வில் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றினார்.
தன், 87 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைகளையும், விருதுகளையும் பெற்றவர், தன் பணியை கைவிட்டு நாடு திரும்பினார்.
பின், பெடப்ரதா பெயின், 1930களில் நடந்த இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றை, சிட்டகாங் என்ற பெயரில் ஹிந்தி திரைப்படமாக இயக்கினார். கலை, அறிவியலில் செய்த சாதனைகளுக்காக பல விருதுகளை பெற்ற இவர், தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார்.
இவரது, 63வது பிறந்த தினம் இன்று!

