sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 16, 2026 ,சித்திரை 3, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

இதே நாளில் அன்று

/

 இதே நாளில் அன்று

/

 இதே நாளில் அன்று

 இதே நாளில் அன்று

 இதே நாளில் அன்று


PUBLISHED ON : ஏப் 13, 2026 12:35 AM

Google News

PUBLISHED ON : ஏப் 13, 2026 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏப்ரல் 13, 1930

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு கிராமத்தில், அருணாச்சலம் - விசாலாட்சி தம்பதியின் மகனாக, 1930ல், இதே நாளில் பிறந்தவர் கல்யாணசுந்தரம்.

குடும்ப சூழலால், பள்ளிப்படிப்பை கூட முடிக்காத இவர், விவசாயம், மாடு மேய்த்தல், உப்பளத்தொழில், முறுக்கு வியாபாரம், நாடக நடிப்பு என, பல வேலைகளை செய்தார். சிறு வயதிலேயே கவிதை எழுதும் திறனுடைய இவர், சக்தி நாடக சபாவில் எழுதி, நடித்த போது, நடிகர் சிவாஜியுடன் பழகினார்.

கவிஞர் பாரதிதாசனின் உதவியாளராகி, கவிதை நுணுக்கங்களை கற்றார். கம்யூனிஷ சிந்தனையாளராகி, பாட்டாளிகளின் நிலையை, 'ஜனசக்தி' இதழில் கவிதைகளாக எழுதினார். படித்த பெண் திரைப்படத்தின் வாயிலாக பாடலாசிரியரானார். காதல், புராண பாடல்கள் கோலோச்சிய அந்த காலத்தில், உழைப்பின் மேன்மை, சமூக சீர்திருத்தம் மற்றும் மக்களின் போராட்டங்களை, பாமரருக்கும் புரியும் வகையில் எளிய பாடல்களாக எழுதினார்.

இவரின், 'துாங்காதே தம்பி துாங்காதே, செய்யும் தொழிலே தெய்வம், சின்னப்பயலே சின்னப்பயலே' உள்ளிட்ட பாடல்கள், மக்கள் மத்தியில் பாராட்டு பெற்றன. இவர் தன், 29வது வயதில், 1959, அக்டோபர் 8ம் தேதி மறைந்தார்.

'மக்கள் கவிஞர்' பிறந்த தினம் இன்று!






      Dinamalar
      Follow us