தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'இல்லேன்னா இருக்குன்னு அர்த்தம்!'

'இல்லேன்னா இருக்குன்னு அர்த்தம்!'

'இல்லேன்னா இருக்குன்னு அர்த்தம்!'


PUBLISHED ON : ஏப் 06, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 06, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக காங்., கட்சியின் தேர்தல் நிதி குழு உறுப்பினர் தி.நகர் ஸ்ரீராமின் 59வது பிறந்தநாள் விழா, சென்னை எழும்பூரில் உள்ள பிரசிடென்சி கிளப்பில் நடந்தது.

விழாவில் கேக் வெட்டி, மட்டன் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி ஹசீனா சையது உட்பட பலர் பங்கேற்றனர். மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி போன்றவர்கள் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்.

விழாவிற்கு வந்த நிர்வாகிகளிடம் தி.நகர் ஸ்ரீராம் பேசுகையில், 'வழக்கமாக, பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடுவேன். இந்த ஆண்டு தான் கட்சி நிர்வாகிகளை அழைத்தேன். பதவி வாங்கவோ அல்லது சட்டசபை தேர்தலில் சீட் வாங்கவோ பிறந்த நாளை கொண்டாடவில்லை' என்றார்.

மூத்த தொண்டர் ஒருவர், 'அரசியல்ல பதவி ஆசை இல்லேன்னு சொன்னா, இருக்குன்னு அர்த்தம்...' என, 'கமென்ட்' அடிக்க, சக தொண்டர்கள்

ஆமோதித்தபடியே கலைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us