PUBLISHED ON : ஆக 09, 2024 12:00 AM

'தரமா எப்படி கட்ட முடியும்?'
புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்தில் புதிதாக 1.25 கோடி ரூபாயில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை, ராஜ்யசபா எம்.பி., சிதம்பரம் திறந்து வைத்தார்.
அப்போது பேசுகையில், 'கல்லணை 2,000 ஆண்டுகளுக்கு முன்பும், தஞ்சாவூர் பெரிய கோவில் 1,000 ஆண்டுகளுக்கு முன்பும் கட்டப்பட்டன; புயல், வெள்ளம், மழை, இடி அனைத்தையும் தாங்கி
நன்றாக தானே உள்ளன.'ஒரு கட்டடத்தை மீண்டும் கட்ட வேண்டும் என்பதில்லை; நீண்ட காலம் நிலைத்து நிற்கக் கூடிய தரமான
கட்டடம் கட்ட வேண்டும். இந்த கட்டடத்தை ஒப்பந்ததாரர் நல்ல முறையில் சிறப்பாக கட்டியிருப்பார் என்று நம்புகிறேன்' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'அரசு கட்டடங்கள் கட்டுறதுக்கு 20 முதல் 30 சதவீதம் கமிஷனே போயிடும்... மீதி பணத்தில், ஒப்பந்ததாரர் லாபமும் பார்த்து, தரமான கட்டடத்தை எப்படி கட்டுவாரு?' என கூற, சக நிருபர்கள் சிரித்தபடியே நகர்ந்தனர்.