PUBLISHED ON : ஆக 18, 2024 12:00 AM

தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு, தாய்ப்பால் தானம் வழங்கியோருக்கு சான்று வழங்கும் நிகழ்ச்சி, திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.கைக்குழந்தையுடன் பெண்கள் பங்கேற்றனர்.குழந்தைகளை பார்த்த கலெக்டர் கிறிஸ்துராஜ், 'இந்த அரங்கில் வழக்கமாக, துறை சார்ந்த அதிகாரிகளைகேள்வி கேட்பதும், அதற்கு அதிகாரிகள் பதிலளிப்பதும் வாடிக்கை. முதல் முறையாக, இந்த அரங்கினுள் இத்தனை கைக்குழந்தைகளை பார்ப்பதும், அவர்களது மழலைக் குரல்களை கேட்பதும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.'குழந்தைகளுக்கு கண் பட்டிருக்கும். அவர்களின் தாயார் வீட்டுக்குச் சென்றதும், குழந்தைகளுக்கு திருஷ்டி சுத்திப்போட வேண்டும்' என்றார்.
பெண் ஊழியர் ஒருவர், 'நிறைய குழந்தைகளை பார்த்ததும், நம்ம கலெக்டரும் குழந்தை மாதிரி மாறிட்டாரே...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.

