PUBLISHED ON : மார் 12, 2025 12:00 AM

தமிழக மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நடந்தது. கூட்டம் முடிந்ததும், அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தி.மு.க., மாணவரணி செயலருமான எழிலரசன் எம்.எல்.ஏ., நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில், 'மத்திய அரசிடம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை கேட்டால், வழங்க வேண்டும். நிதியை தராமல் மறுத்துவிட்டு, தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும். மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் நிதியை தருவோம் என, மத்திய அமைச்சர் கூறியதை கண்டிக்கிறோம். தமிழகத்தில் எப்போதும் இருமொழி கொள்கை தான் இருக்கும் என்ற கொள்கையை தொடர் போராட்டக் களத்தில் உறுதிப்படுத்த உள்ளோம்' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'தேசிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதால், தமிழகத்திற்கு வர வேண்டிய 5,000 கோடி ரூபாய் போச்சே சொக்கா...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.