PUBLISHED ON : மார் 07, 2025 12:00 AM

திருப்பூர் மாவட்டம், அலகுமலையில் ஜல்லிக்கட்டு நடந்தது. வீரர்களின் பிடியில் சிக்காத முரட்டுக்காளை ஒன்று, ஜல்லிக்கட்டு நேரம் முடிந்த பின்னரும் வெளியேறாமல், களத்திலேயே நின்றது.
கம்பு, கயிறுடன் வாகனத்தில் வந்த குழுவினர், மாட்டின் கழுத்தில் கயிறு போட்டு பிடிக்க முயன்றனர். பல முறை முயன்றும், கொம்பால் கயிறை தட்டிவிட்டு காளை நழுவியது; இதனால், குழுவினர் சோர்ந்து போயினர்.
இதை பார்த்த நிகழ்ச்சி வர்ணனையாளர், 'கயித்துல சிக்காம எப்படி தப்பிக்கிறதுன்னு இந்த மாடு நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கு... வளர்த்தவங்களுக்கே தண்ணி காட்டுதே... சரியான சண்டி மாடு தான்...' என, 'கமென்ட்' அடித்தார்.
உடனே, பார்வையாளர் ஒருவர், 'மாடு கழுத்துல கயிறை போடுறதுக்கே ஒரு போட்டி வைக்கணும் போலிருக்கே...' எனக் கூற, சுற்றியிருந்தவர்கள் சிரித்தபடியே நடையை கட்டினர்.