PUBLISHED ON : ஆக 29, 2024 12:00 AM

சென்னையில் நடந்த கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில், மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உட்பட அக்கட்சியின் ஐந்து முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில், தமிழக பா.ஜ., துணை தலைவர் வி.பி.துரைசாமியும் ஒருவர். இவர், தி.மு.க.,வில் இருந்தபோது துணை பொதுச்செயலர், துணை சபாநாயகர் என, முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.
விழாவில், இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்தஅவர், மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்த தன் பழைய நண்பர்களான, தி.மு.க., அமைச்சர்கள் சிலரை பார்த்து, 'நான் ரெண்டாவது வரிசையில் இருக்கேன்... நீங்க எனக்கு பின்னாடி இருக்கீங்க... என்ன இருந்தாலும் சென்ட்ரல் சென்ட்ரல் தான்...' என்றார்.
இதை கேட்ட தி.மு.க., நிர்வாகி ஒருவர், 'விழாவுக்கு வந்தோமா, போனோமான்னு இல்லாம, நம்மள கட்சி மாறச் சொல்றாரா...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.

