PUBLISHED ON : ஆக 24, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த விவசாய கண்காட்சியை, தமிழக அமைச்சர்கள் அன்பரசன், பன்னீர்செல்வம், நேரு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பன்னீர்செல்வம் பேசுகையில், 'அமைச்சர் நேரு முதலில் விவசாயி; பின், மிளகாய் வியாபாரியும் கூட. அவர் நிறைய பேசுவார்' என்றார்.
நேரு பேசுகையில், 'முதல்வர் நிகழ்ச்சிக்கே பன்னீர் செல்வம் தாமதமாக தான் வருவார். அவர் சார்ந்த துறைக்கு மட்டும், 50,000 கோடி ரூபாய் முதல்வர் ஒதுக்கீடு செய்கிறார். முதல்வருக்கு அவர் தான் தளபதி' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'சீனியர் அமைச்சர்கள் ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர், 'ரொம்ப பாசமா' இருக்காங்கன்னு நல்லா தெரியுது...' என முணுமுணுக்க, உடன் இருந்தோர், நமட்டு சிரிப்புடன் நடையை கட்டினர்.