PUBLISHED ON : மார் 10, 2025 12:00 AM

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், சீரமைக்கப்பட்ட குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கும் விழா, சென்னை, புளியந்தோப்பில் நடந்தது.
இதில் பங்கேற்று, முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், 'நீதி கட்சி ஆட்சியில் இருந்த போது, தியாகராயரால் சில பள்ளிகளில் மதிய உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. அதை தான், காமராஜர் எல்லாருக்கும்கிடைக்கும் வகையில் பரவலாக்கினார். அதன் பின் ஆட்சிக்கு வந்த, எம்.ஜி.ஆர்., மதிய உணவு திட்டத்தை, 'சத்துணவு திட்டம்' என்று மாற்றினார்.
'அதையடுத்து, கருணாநிதி ஆட்சி பொறுப்பேற்ற பின், அது உண்மையான சத்துணவாக இருக்க, முட்டையும் சேர்த்து வழங்கினார். தற்போது, பள்ளிகளில் காலை உணவு திட்டத்தையும் சேர்த்து வழங்கி வருகிறோம்' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'காமராஜர் ஆட்சியில் சத்துணவு தரலை... நாங்க தான் தந்தோம்னு முதல்வர் சொல்லாம சொல்றாரோ...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சத்தமின்றி சிரித்தனர்.