PUBLISHED ON : ஆக 03, 2024 12:00 AM

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மைதானத்தில் நடந்தன. இதில், கிரிக்கெட், புட்பால், த்ரோபால், இறகு பந்து போன்ற விளையாட்டுகளில் மாநகராட்சி ஊழியர்கள் உட்பட ஐந்து மண்டலங்களிலும் பணிபுரியும் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரிகளும் விளையாடினர்.
மகிழ்ச்சியாக சிரித்தபடி, 'ஏய் அந்த பந்தை அப்படி அடி, இந்த பக்கமாக பந்தை போடு' என்று கூச்சலிட்டு மகிழ்ச்சியுடன் விளையாடினர்.
வேடிக்கை பார்த்த ஒருவர், 'நாம பல்வேறு கோரிக்கைகளுக்காக மாநகராட்சி ஆபீஸ் போனா, நம் மீது எரிந்து விழும் அதிகாரிகள் இங்கே சிரித்தபடி விளையாடுறாங்க... இப்படியே ஆபீசிலும் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்...' என முணுமுணுக்க, உடன் வந்த மற்றொருவர், 'ஆபீஸ்ல சிரிச்சிட்டு இருந்தா சில்லரை தேறாதே...' என, 'கமென்ட்' அடித்து சிரித்தார்.