PUBLISHED ON : ஏப் 11, 2024 12:00 AM

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி, 25 ஆண்டுகளாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 2021 சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பேசிய ஸ்டாலின், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்போம்' என, வாக்குறுதி அளித்தார். ஆனால், இதுவரை அறிவிக்கவில்லை.
இதற்கிடையே, மயிலாடுதுறை காங்., வேட்பாளர்சுதாவுக்கு ஆதரவாக, உதயநிதி பிரசாரம் செய்த போது, 'இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், கும்பகோணம் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்படும்' என, வாக்குறுதி அளித்தார்.
இதைக் கேட்ட வாக்காளர் ஒருவர், 'அப்பா தனி மாவட்டம் வாக்குறுதின்னா, மகன் ஸ்மார்ட் சிட்டி வாக்குறுதி தர்றார்... மொத்தத்துல ரெண்டு பேரும் கும்பகோணத்தை வச்சு நல்லா சடுகுடு ஆடுறாங்க...' என, முணுமுணுத்தவாறு நடையை கட்டினார்.

