/
தினம் தினம்
/
பக்கவாத்தியம்
/
'நல்ல வேளை... கேட்காமல் விட்டாரே!'
/
'நல்ல வேளை... கேட்காமல் விட்டாரே!'
PUBLISHED ON : மார் 03, 2025 12:00 AM

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலை, அவரது, சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில், சமீபத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் முத்தரசன் சந்தித்து பேசினார். ம.நீ.ம., துணைத் தலைவர் அருணாசலம் உடனிருந்தார். சந்திப்பு, 30 நிமிடம் நடந்தது.
'வரும் சட்டசபை தேர்தலில், மத்திய அரசை எதிர்த்து தீவிரமாக பிரசாரம் செய்ய வேண்டும். ராஜ்யசபா தேர்தலில் எங்கள் கட்சி, எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு உங்களுக்கு உண்டு' என, கமலிடம், முத்தரசன் தெரிவித்துள்ளார். அதற்கு கமலும் ஆமோதித்தார். பின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நுாற்றாண்டு வரலாறு நுாலை, கமலிடம் முத்தரசன் வழங்கினார்.
இதை கேள்விப்பட்ட, ம.நீ.ம., நிர்வாகி ஒருவர், 'நல்ல வேளை... ஆதரவு உண்டு எனச் சொன்னதோட, 'காம்ரேட்' நிறுத்திக்கிட்டாரு... 'அப்படியே எங்களுக்கும் ஒரு ராஜ்யசபா சீட்டை உங்க நண்பர் உதயநிதியிடம் சொல்லி வாங்கித் தாங்க தோழரே...'ன்னு கேட்காமல் விட்டாரே...' என்றார்.