PUBLISHED ON : ஜூலை 09, 2024 12:00 AM

திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பா.ஜ., நிர்வாகி ராம ஸ்ரீனிவாசனை அறிமுகம் செய்து, அவரை பேச அழைத்தனர்.
ராம ஸ்ரீனிவாசன் பேசுகையில், 'முதலில் நான் ஆர்.எஸ்.எஸ்.,சில் பணிபுரிந்தேன். அப்போது பா.ஜ., கட்சிக்காரன். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க, லோக்சபா தேர்தல் நடக்கும் போது அழைத்தனர். அப்போது மதுரை வேட்பாளராக இருந்தேன். வெற்றி பெற்றிருந்தால் இந்நேரம் எம்.பி.,யாக சென்றிருப்பேன்.
'இந்நிகழ்ச்சிக்கு வந்திருக்க முடியாது. உங்களுக்காகவோ, என்னவோ தேர்தலில் வெற்றி பெறவில்லை. அதனால் வந்துள்ளேன். ஒருவேளை ரோட்டரி கவர்னராக கூட ஆகலாம்' என்றார்.
பார்வையாளர் ஒருவர், 'தேர்தலில் தோற்றால், கவர்னர் பதவி தர்றது இவங்க கட்சியில் வழக்கம் தானே... அந்த வகையில், இவரும் ஏதாவது ஒரு மாநிலத்துக்கு கவர்னர் ஆகலாமே...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.